Monday, July 25, 2011

This week's Songs:

Aariro Aariro from Deiva thirumagal movie. The lyrics of this song for u all here in tamil

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு


and the link is below for watching this song

http://www.youtube.com/watch?v=YKpe2GlbBsE


No comments: